மும்பை: கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களுக்கு லாக்டவுன் அறிவிக்கப்படும் என்று மகாராஷ்டிர சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் சில நாள்களாக கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் டோப் கூறியதாவது:

கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை வழக்கம் போல் அதிகரித்துக் கொண்டே வருகிறது. நிலைமை மேலும் மோசமடைந்தால், அதிக தொற்றுகள் பதிவுகள் மாவட்டங்களுக்கு பொதுமுடக்கம் அறிவிக்கப்படும்.

மும்பையில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றாத 20 லட்சத்துக்கும் அதிகமான நபர்களிடம் இருந்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.