சமூக வலைத்தளங்களை தேசவிரோத செயலுக்கு பயன்படுத்தினால்…. ! மத்தியஅமைச்சர் எச்சரிக்கை

--

டில்லி:

மூக வலைத்தளங்களை தேச விரோத செயலுக்கு பயன்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை பாயும் என்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீப காலமாக  நாடுமுழுதும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூகவலைதளங்கள் மூலம் பரவலாக வதந்திகள் பரவிவருகிறது. இதன் காரணமாக தமிழகம் உள்பட பல மாநிலங்களில் அப்பாவிகள் மீது தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன.இந்த தாக்குதலில் பலர் கொல்லப் பட்டும் உள்ளனர். மேலும், அரசின்  திட்டங்களுக்கு எதிராகவும்  வதந்திகள் பரப்பப்பட்டு அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெறுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக வதந்திகளை தடுக்கும் வகையில் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்-அப் நிறுவனத்துக் துக்கு மத்திய அரசு  கடிதம் எழுதியதோடு எச்சரிக்கையும் விடுத்தது.

மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த மத்திய அமைச்சர் கூறியதாவது,

சமூக வலைத்தளங்களான பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் யூடூப் மூலம் பல வதந்திகள் பரப்பட்டு வருகிறது. இந்த வதந்திகளை தடுக்க சமூக வலைத்தளம் நிறுவனத்துக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது. அவர்கள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் 500-க்கு மேற்ப்பட்ட தவறான தகவல்கள் தற்போது நீக்கப்பட்டு உள்ளன. மேலும் வதந்தி மற்றும் தவறான தகவல்களை பரப்புவர்களை கண்காணிக்க அதிகாரிகள் குழு  நியமிக்கப்பட்டு உள்ளது.

சமூக வலைத்தளங்கள் மூலம் தேசத்திற்கு விரோதமாகவும், எதிராகவும் தகவல்கள் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.