தந்தையை கவனிக்காவிடில் சொத்தை திரும்ப பெறலாம் : மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை

ந்தையை கவனிக்காத மகனுக்கு அளித்த சொத்தை திரும்ப பெறலாம் என மும்பை உயர்நீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறி உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஒரு முதியவர் தனது மனைவியை இழந்துள்ளார்.   மகன் மற்றும் மருமகள் இருந்தும் அவரை யாரும் கவனிக்கவிலை.   அதனால் அவர் மறுமணம் செய்ய விரும்பி உள்ளார்.   ஆனால் அவருடைய மகனும் மருமகளும் திருமணத்துக்கு முன்பு தந்தையின் பெயரில் உள்ள சொத்துக்களை தரவேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

முதியவர் தனது மகனுக்கு தனது குடியிருப்பில் 50 சதவிகிததை வழங்கி விட்டு மறுமணம் செய்துள்ளார்.    அதன் பிறகு அந்த மகனும் மருமகளும் முதியவரையும் அவரது இரண்டாவ்து மனைவியையும் தொடர்ந்து கொடுமைப் படுத்தி உள்ளனர்.   கொடுமை அளவுக்கு மீறியதால் முதியவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி தனது தீர்ப்பில், “முதியவர்கள் பாதுகாப்புச் சட்டப்படி தந்தையை கவனிக்க வேண்டியது மகனுடைய கடமையாகும்.   அவ்வாறு நடக்கவில்லை எனில் கொடுத்த சொத்தை திரும்பப் பெற தந்தைக்கு உரிமை உண்டு.   அதனால் முதியவர் மகனுக்கு எழுதிக் கொடுத்த பத்திரத்தை ரத்து செய்கிறேன்” என உத்தரவிட்டுள்ளார்.