நடிகர்கள் சம்பளத்தை குறைக்கவில்லை என்றால்..: மிரட்டல் விடுத்த தயாரிப்பாளர்   ஞானவேல்ராஜா

ல்லு அர்ஜூன் நாயகனாக நடித்துள்ள படம், “என் பெயர் சூர்யா.. என் வீடு இந்தியா”. இந்தப் படத்தின் செய்தியாளர்  சந்திப்பு நேற்று சென்னயில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கலந்துகொண்டு பேசும்போது நடிகர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிவிட்டார்.

“தமிழ் சினிமாவில் நடிர்களின் சம்பளம் மிக அதிகமாக உள்ளது” என்று புகார் கூறயவர், “ இதே நிலை நீடித்தால் நான் தமிழ்நாட்டை   விட்டு ஐதராபாத் சென்று தெலுங்கு படங்களை தயாரிக்கத் தொடங்கி விடுவேன்” என்று மிரட்டலாகவும் பேசினார்.

மேலும், “ தமிழ் சினிமாவில் நடிகர்களின் சம்பளம்தான் என்னைப்போன்ற தயாரிப்பாளர்களுக்கு ஒரு பெரும் பிரச்னையாக இருக்கிறது.  ஒரு நடிகர் நடிக்கும் படத்திற்கு 100 கோடி வியாபாரம் உள்ளது என்றால், 50 கோடி அவர்கள் சம்பளம் கேட்கிறார்கள். ஆனால் தெலுங்கில் அப்படியல்ல எவ்வளவு பெரிய நடிகராக இருந்தாலும் 15 கோடி தான் சம்பளம் பெறுகிறார்கள்.

அந்த அளவுக்கு தெலுங்கு தயாரிப்பாளர், நடிகர்களுக்கிடையே நல்லதொரு புரிதல்
இருக்கிறது. ஆகவே  தெலுங்கு சினிமாவைப் போன்ற சூழல் தமிழ் சினிமாவிலும் வர வேண்டும். படங்களின் வியாபாரத்திற்கேற்ப நடிகர்களின் சம்பளத்தை நிர்ணயிக்க வேண்டும்.

இன்னும் ஒரு  ஆண்டுக்குள்  இந்த நிலை தமிழ் சினிமாவில் உருவாகவில்லை என்றால், நான் ஐதராபாத்திற்கு சென்று தெலுங்கு படங்கள் தயாரிக்கத் ஆரம்பித்து விடுவேன்” என்று சொல்லி முடித்தார் ஞானவேல்ராஜா.