ரஜினியுடன் பாஜ கூட்டணி சேர்ந்தால்…… சு.சாமி மிரட்டல்

டில்லி,

னது எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பாஜ கூட்டணி சேர்ந்தால் தான் வேறு மாநிலத்துக்கு சென்றுவிடுவேன் என்று பாஜக தலைமைக்கு மிரட்டல் விடுத்துள்ளார் சுப்பிரமணியசாமி.

நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலுக்கு வருவது உறுதி என்றும்,  தனி கட்சி தொடங்க உள்ளதாகவும், 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என்றும் கூறியுள்ளார்.

ரஜினி அரசியல் பிரவேச பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி. காலையில் கூறும்போது,  ரஜினியின்  அறிவிப்பு வெற்று அறிவிப்புதான். கட்சி குறித்து வேறு எந்த விவரங்களையும் அவர் குறிப்பிடவில்லை. ஏன் என்றால் அவர் படிப்பறிவில்லாதவர் என்று வசைபாடிய அவர், தற்போது மீண்டும் ரஜினியை வசை பாடி உள்ளார்.

ரஜினியிடம்  கொள்கைகளோ, கோட்பாடுகளோ இல்லை. தமிழக மக்கள் புத்திசாலிகள். என் எதிர்ப்பையும் மீறி ரஜினியுடன் பாஜக கூட்டணி வைக்க கூடாது. அதையும் மீறி வைத்தால் நான் வேறு மாநிலத்துக்கு செல்வேன். ரஜினி அரசியலுக்கு வந்தாலும் வராவிட்டாலும் ஒன்றும் மாறாது  என்று கூறியுள்ளார்.