முதல்வருக்கே மிரட்டலா? :  ஹெச்.ராஜா அதிர்ச்சி

 

சென்னை:

முதல்வர் பன்னீர் செல்வத்துக்கே மிரட்டலா? அப்படியானால் குடிமக்கள் நிலைமை என்னவாகும்? என்று அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார் பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா.

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று செய்தியாளர்களிடம் பேசும்போது அவர் சார்ந்த அ.தி.மு.க. பொதுச்செயலாளர் சசிகலா மீது அதிர்ச்சி குற்றச்சாட்டுக்களை வீசினார். பதவியைவிட்டு தான் விலகும்படி சசிகலா தரப்பினர் கட்டாயப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.

இதுதொடரபாக செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, “முதல்வரை மிரட்டி சசிகலா தரப்பு ராஜினாமா கடிதத்தை பெற்றுள்ளது.

மாநில முதல்வருக்கே இந்த நிலைமை என்றால் சாதாரண குடிமக்களின் நிலை என்ன ஆகும்?

முதல்வர் ஓபிஎஸ்க்கு பாதுகாப்பு அளிப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளடப.  கூடுதல் பாதுகாப்பு தேவைப்பாட்டால் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மத்திய அரசிடம் கோரலாம்” என்று ஹெச்.ராஜா தெரிவித்தார்.