புதுடெல்லி: பியூச்சர் ரீடெய்ல் – ரிலையன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடையிலான ஒப்பந்தம் தோல்வியடைந்தால், சுமார் 11 லட்சம் ஊழியர்கள் வேலையிழப்பார்கள் என்று எஃப்எம்சிஜி என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிக் பஜார், ஈஸிடே, நில்கிரிஸ், சென்ட்ரல், பிரான்ட் பேக்டரி உள்ளிட்ட பல வர்த்தகங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு, மேற்கண்ட இரண்டு நிறுவனங்களும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இதன்மூலம், அதில் பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேசமயம், அமேசான் நிறுவனத்தால் உருவாக்கப்படும் வழக்குகள் மற்றும் தடைகள், இந்த ஒப்பந்தத்தை பாதிக்கலாம்  என்று கூறப்படுகிறது. அப்படியாக இந்த ஒப்பந்தம் பாதிக்கப்பட்டால், சுமார் 11 லட்சம் ஊழியர்கள் பணியிழப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பியூச்சர் குரூப் நிறுவனத்திற்கு, நாடெங்கிலும் 450 நகரங்களில், 2000 ஸ்டோர்கள் உள்ளன.