கிருஷ்ணகிரி:

மத்தியில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தொரப்பள்ளி கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

அப்போது அவர் பேசும்போது, ”
மத்தியில் திமுக கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும். திமுக வெற்றி பெறும் என்பதால், தான் உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், அதிமுக அரசு தள்ளிப்போடுகிறது.

மக்களவை தேர்தலுடன் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் வர வாய்ப்பு உள்ளது. மேலும் திமுக ஆட்சிக்கு வந்த பின் விவசாய கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் .

கட்சி பாகுபாடு இல்லாமல் முதியோர் ஓய்வூதியம் வழங்கப்படும்” என்றார்.