லண்டன்:  கொரோனா தடுப்பூசிகள் 2 டோஸ் போட வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில்,  முதல் டோஸ் தடுப்பூசி குறைவான அளவாக இருந்தால், அதிகமானவர்களுக்கு விரைவாக போட முடியும் என்று அஸ்டாஜெனெகா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அஸ்ட்ராஜெனெகாவின் தலைமை நிர்வாக அதிகாரி பாஸ்கல் சொரியட்  இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, கொரோனா வைரஸ் தடுப்பூசி எந்தவொரு தீவிர பக்க விளைவுகளும் இல்லாமல் 90% பயனுள்ளதாக உள்ளது என்று தெரிவிததார். மேலும், கொரோனா  தடுப்பூசியின் குறைந்த முதல் டோஸ் குறைவான அளவாக இருந்தால், அதிக மக்களுக்கு விரைவாக தடுப்பூசி போட முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கிய அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி  அதிகமானவர்களுக்கு விரைவாக தடுப்பூசி போடுவது என்பது ஒரு பெரிய பிளஸ் பாய்ன்ட் என்று தெரிவித்தவர்,  இந்த  தடுப்பூசி எந்தவொரு தீவிர பக்க விளைவுகளும் இல்லாமல் 90% பயனுள்ளதாக இருக்கும். மேலும், தடுப்பூசி  அரை டோஸாக நிர்வகிக்கப்பட்டபோது மிகவும் பயனுள்ளதாக இருந்தது, குறைந்தது ஒரு மாத இடைவெளியில் இரண்டு முழு அளவுகளாக இல்லாமல், குறைந்தது ஒரு மாத இடைவெளியில் ஒரு முழு டோஸைப் பயன்படுத்தியதாகவும், அதன்முடிவுகள் வெற்றிகரமாகஇருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பூசி ஒவ்வொருவருக்கும் இரண்டு டோஸ் போடப்பட வேண்டும் என்றும்,அதுவும் ஒரு மாதத்திற்குள் போடப்படவேண்டும் என்று மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் அறிவுறுத்தி வருகின்றன.