ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் வந்தால்…..! எச்சரிக்கும் முன்னாள் தந்திரி பேரன்

பந்தளம்:

புகழ்பெற்ற ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இது நாடு முழுவதும் உள்ள இந்துக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி  உள்ளது.

இந்த நிலையில்,  சபரிமலை நடை திறக்கும் போது கோவிலுக்கு பெண்கள் வர முயற்சித்தார்… நாங்கள்  காந்தியவழியில் அறிவுரை கூறி  திருப்பி அனுப்புவோம் என்று ஐயப்பன் கோவில் முன்னாள் தந்திரியின் மகன் ராகுல் ஈஸ்வர் தெரிவித்து உள்ளார்.

கேரளாவில் உள்ள , பிரசித்தி பெற்ற, சபரிமலை அய்யப்பன் கோவிலுக்குள் 10 வயதிற்கு கீழும் 50 வயதிற்கு மேலும் உள்ள பெண்கள் மட்டும்தான் அனுமதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் அனைத்துப் பெண்களையும் அய்யப்பன் கோவிலுக்குள் என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. இது ஒரு தரப்பினர் வரவேற்பு தெரிவித்தாலும், பெரும்பாலோர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளாவில் அனைத்து தரப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

இந்த நிலையில்,  வரும் 16 ஆம் தேதி முதல் சபரிமலையில் பெண்களை அனுமதிக்க பினராயி தலைமையிலான கம்யூனிஸ்டு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

இந்த நிலையில்,  சபரிமலை தலைமை தந்திரியாக இருந்து  மறைந்த,  மகேஸ்வரருவின்  பேரன்,  ராகுல் ஈஸ்வர்  திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் சபரி மலை வர முயலும் பெண்களுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இவர் அய்யப்பன் கோவிலின் முன்னாள் தலைமை தந்திரியாக  இருந்து, மறைந்த,  மகேஸ்வரருவின் பேரனும், அய்யப்ப சேவா சங்கத்தைச் சேர்ந்தவர். இளைஞரான ராகுல் ஈஸ்வர்  ஐயப்பன் கோவிலுக்குள் பெண்கள் வருவதை எதிர்த்து போர்க்கொடி தூக்கி உள்ளார்.

ச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, கோவிலை நிர்வகிக்கும் திருவிதாங்கூர் தேவசம்போர்டு, சீராய்வு மனு தாக்கல் செய்யாதது, பக்தர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்று கூறியுள்ள ஈஸ்வர்,  இது பிரம்மச்சாரியாக பிரதிஷ்டை  செய்யப்பட்டுள்ள அய்யப்பன் பற்றிய ஐதீகத்திற்கு விரோதமானது என  தெரிவித்து உள்ளார்.

பக்தர்கள் செலுத்தும் காணிக்கையில் இயங்கும் தேவசம் போர்டு, அய்யப்பனுக்காக, 10லட்சம் ரூபாய்  செலவிட்டு , வழக்கறிஞரை ஏற்பாடு செய்திருக்க வேண்டும் என்று கடுமையாக சாடிய ஈஸ்வரர்,  பிற அமைப்புகள்  சீராய்வு  மனு தாக்கல் செய்தாலும், தீர்ப்பை நடைமுறைப்படுத்தும் தேவசம்போர்டு சீராய்வு மனு தாக்கல் செய்யவில்லை என்றால்,  அந்த வழக்கு பலவீனமாகும் என எச்சரித்துள்ளார்.

மேலும்,  தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எவ்வாறு போராட்டம் நடைபெற்றதோ, அதுபோல, கேரளாவிலும் அமைதியான வழியில் உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்துவோம் என்றும், இந்த போராட்டத் துக்கு ‘அய்யப்ப ஜல்லிக்கட்டு’ என்ற பெயரிடலாம் என முடிவு செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கு சிறப்பு சட்டம்இயற்றியது போல, சபரிமலை விவகாரத்தில், கேரள அரசு சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும் என வலியுறுத்தி உள்ள  ராகுல் ஈஸ்வர்  வரும் 16 ம் தேதி  நடை திறக்கப்படும் ஐயப்பன் கோவிலை  ஏராளமான பக்தர்கள்  காவல் காப்பார்கள் என்றும் கூறி உள்ளார்.

அதையும் மீறி அங்கு அங்கு 10 முதல் 50 வயதுடைய  பெண்கள்  வந்தால், அவர்களுக்கு  காந்திய வழியில்  அறிவுரை கூறி திருப்பிஅனுப்புவோம், அதையும் மீறினால்,   பக்தர்களின் நெஞ்சின் மீது மிதித்துதான்,  செல்லவேண்டும்.

இந்த அறவழிப்போராட்டத்தில், தமிழக பக்தர்களும் பங்கேற்று, சபரிமலையின்புனிதத்தை காக்க முன் வர வேண்டும்/

இவ்வாறு ராகுல் ஈஸ்வர் தெரிவித்துள்ளார்.