கவர்னர் ஆய்வை தொடர்ந்தால் நானே கருப்பு கொடி காட்டுவேன்: ஸ்டாலின்

சென்னை:

மிழகத்தில்   ஆளுநர் ஆய்வு தொடரும் பட்சத்தில்நானே நேரில் சென்று கருப்புக்கொடி காட்டுவேன் என்று திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

கரூரில் திமுக மாணவரணி ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கட்சியின் வளர்ச்சி மற்றும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

அதைத்தொடர்ந்து,  மத்திய – மாநில அரசுகள் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், சேலம் எட்டு வழி பசுமைச்சாலை திட்டத்தை மாற்று வழியில் செயல்படுத்த நிபுணர்கள் குழு அமைக்க வேண்டும், குடியரசுத் தலைவரிடம் கிடப்பில் உள்ள நீட் தேர்வு விலக்கு மசோதா குறித்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர வேண்டும் உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் பேசிய மு.க.ஸ்டாலின்,  கவர்னரின் ஆய்வு அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என்றும், கவர்னர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தால் 7 ஆண்டுகள் சிறை தண்டனை என்று மிரட்டுகிறார்கள் என்று பேசினார். மேலும், கவர்னர் அடுத்தக்கட்ட ஆய்வு பயணம் தொடர்ந்தால், நானே நேரில் சென்று கருப்புகொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபடப்போகிறேன் என்றும் தெரிவித்தார். பின்னர் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், மாநில சுயாட்சியை பாதுகாக்க ஆயுள் தண்டனையை கூட அனுபவிக்க தயார்.

இவ்வாறு அவர் கூறினார்.