​ ஆட்சி அமைக்காவிட்டால் இனி தேர்தலில் போட்டி இல்லை! :  வைகோ அறிவிப்பு

1

 

மிழகத்தில் இந்த முறை கூட்டணி ஆட்சி வரவில்லை என்றால், இனி தேர்தலில் போட்டியிடாமல் ஒதுங்கிவிடப்போவதாக  மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் வைகோ தேர்தல் பிரச்சாரம் செய்தார். அப்போது “வர இருக்கும் சட்டமன்றத்  தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக்கூட்டணி த.மா.கா 150 இடங்களில் வெற்றி பெறும். ஆனால்  ஊடகங்கள் தவறான கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு எங்கள் வாக்குகளை பிரித்து திமுகவுக்கு விழ வைக்க முயற்சிக்கின்றன” என்றார், மேலும் “கூட்டணி ஆட்சியில் மாணவர்கள் 25 மரம் நட்டால் அவர்களுக்கு நேர்முகத் தேர்வில் ஒரு மார்க் வழங்கப்படும்” என்றார்.

மேலும் அவர் பேசுகையில், “ இதுபோன்ற ஒரு கூட்டணி வாய்ப்பு திரும்பவும் அமையாது.  இந்த தேர்தலில் ஆட்சி அமைக்காவிட்டால் இனி தேர்தலில் போட்டியிட மாட்டோம்”  என்று ஆவேசமாக தெரிவித்தார்.