டில்லி:

யில் பயணத்திற்கு ஐஆர்சிடிசி இணையதளம் மூலம் பதிவு செய்பவர்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தி உள்ள ஐஆர்சிடிசி நறுவனம்.

இதன்படி, தக்கல் மூலம் பயணம் செய்யும் பயணிகள், தாங்கள் பயணம் செய்யும் ரயில் 3 மணி நேரத்திற்கும் மேலாக தாமதமாக வந்தால், பயணச்சீட்டுக்கான முழு கட்டணத் தொகையை திரும்ப பெறலாம் என அறிவித்து உள்ளது.

ஐஆர்சிடிசி மாற்றம் செய்துள்ள விதிகள்:

குறிப்பிட்ட ரயில் 3 மணி நேரத்துக்கு மேல் தாமதமாக வந்தால் தக்கால் பயணச்சீட்டு எடுத்தவர் பயணச்சீட்டை ஒப்படைத்து முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெறலாம்.

முன்பதிவு செய்த ரயில் வேறு பாதை வழியாகத் திருப்பி விடப்படும் போது, அந்தப் பாதையில் பயணம் செய்ய விரும்பாத பயணி, பயணச் சீட்டுக்கான முழுக் கட்டணத்தையும் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.

குளிர்சாதன வசதி பெட்டிகளுக்கு 10 மணிக்கும், குளிர்சாதனம் அல்லாத பெட்டிகளுக்கு 11 மணிக்கும் முன்பதிவு தொடங்கும்.

இவ்வாறு ஐஆர்சிடிசி நிறுவனம் தெரிவித்துள்ளது.