சென்னை:

ந்தேகப்படும் நபர் இருந்தால் உடனே 100ஐ தொடர்பு கொள்ளுங்கள் என்று பொதுமக்களுக்கு தமிழக  டிஜிபி திரிபாதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழகத்திற்குள் பாகிஸ்தானை சேர்ந்த ஒருவர் மற்றும்  இலங்கையை சேர்ந்த 5 பேர் என மொத்தம் ஆறு நபர்கள் நுழைந்து இருப்பதாகவும் மத்தியஅரசு கடந்த மாதம் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து தமிழகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

சந்தேகப்படும் இடங்களில் காவல்துறையினர் சோதனையிட்டு வருகின்றனர். இந்த நிலையில்,  செய்தியாளர் களிடம் பேசிய தமிழக டிஜிபி திரிபாதி, சந்தேகப்படும்படி யாராவது நடமாடினால் உடனே 100க்கு போன் செய்யுங்கள் என்றார்.

சென்னை எழும்பூர் பழைய காவல்ஆணையர் அலுவலகத்தில்  மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையம்  செயல்பட்டு வருகிறது என்று கூறியவர், இந்த மையம் முற்றிலும்  கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு இருப்பதாகவும், 24 மணி நேரமும் செயல்படும் என்றும் தெரிவித்தார்.

மாநிலத்தின் எந்த மூலையில் இருந்து எந்த நேரத்திலும் 100 எண்ணுக்கு தொடர்பு கொண்டாலும், அந்த அழைப்பு இந்தமையத்திற்கு உடடினயாக வந்துவிடும் என்றவர், பொதுமக்கள் அவசர உதவி மற்றும் சந்தேக நபர் மற்றும் சந்தேகப்படும் பொருட்கள் குறித்து தகவல் தெரிவித்தால், சந்தேகப்படும் நபர்கள் தங்கியுள்ள இடத்தை காவல்துறையினர் துல்லியமாக கண்டறிந்து அந்த இட்த்துக்கு வந்து விடுவர் என்றார்.

மேலும், பொதுமக்கள் சந்தேக நபர் குறித்து 100 அல்லது 79977 00100 என்ற எண்களுக்கு  தகவல் தெரிவிக்கலாம் என்றவர், மொபைல் எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலமும் தகவல் அனுப்பலாம் என்று தெரிவித்தார்.