Random image

சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் 8 வழி சாலை திட்டத்தைத் தொடரமாட்டோம்!: மத்திய அரசு

சுற்றுச்சூழல் அனுமதி இல்லை என்றால் 8 வழி சாலை திட்டத்தைத் தொடரப்போவதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சென்னையில் இருந்து சேலத்துக்கு எட்டுவழிச்சாலை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணியாக, நலங்களை கையகப்படுத்தும் பணி நடந்துவருகிறது.

இதற்கு அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

“இச்சாலையில் பெரும்பகுதி விவசாய நிலங்களுக்கு இடையே வருகிறது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது” என்று எதிர்ப்பு குரல் எழுந்தது. பல்வேறு அமைப்புகளும், மக்கள் தன்னிச்சையாகவும் இத்திட்டத்தை எதிர்த்து போராட்டங்களை நடத்தினர்.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம், “எட்டுவழிச்சாலை திட்டத்துக்கு தடை இல்லை. நிலங்களையும் கையகப்படுத்தலாம். அதே நேரம், அந்நிலங்களில் இருந்து மக்களை அப்புறப்படுத்தக்கூடாது” என்று உத்தரவிட்டது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில், “இத்திட்டத்திற்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்படவில்லை என்றால் திட்டத்தை தொடர மாட்டோம்.  எட்டு வழிச்சாலை திட்டத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் மட்டுமே தற்போது நடைபெற்று வருகிறது” என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.