மதுரை,

துரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

‘முத்துராமலிங்கத் தேவரின் 110-வது ஜெயந்தி விழாவை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர். தமிழகம் முழுவதும் தேவர் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மதுரையில் உள்ள பசும்பொன் தேவர் சிலைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்.ராதாகிருஷ்ணன்,  பசும்பொன் திருமகனார் எந்த லட்சியத்திற்காக வாழ்ந்தாரோ, அவரது லட்சியப்படி வாழ்ந்து அவரை கவுரவப்படுத்தும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், அதுபோலவே தற்போதைய  பாரதியஜனதா கட்சியின்  பிரதமர் நரேந்திர மோடி அரசாங்கம் செயல்பட்டு வருகிறது.

இதுபோன்ற ஒரு துணிச்சல் மிக்க நேர்மையான, வள்ர்ச்சி பெறக்கூடிய, ஊழலற்ற ஆட்சியைத்தான் தேவர் பெருமகனார் எதிர்பார்த்தார்கள். அது இன்று நடைபெற்றுக்கொண்டிருகிறது.  அவரது சிந்தனை, செயல்பாடுகளை தற்போதையமோடி அரசு செய்துகொண்டிருக்கிறது.

தேவர் பெருமகனார் இன்று உயிரோடு இருந்திருந்தால் பாஜகவின் ஆட்சியை பார்த்து பூரித்துப்போயிருப்பார். இதை விண்ணு லகில் இருந்து பார்ப்பார். இப்படி ஒரு ஊழலற்ற சிறந்த ஆட்சியை பார்த்து பிரமித்து போயிருப்பார். அவர் வானிலிருந்து வாழ்த்துவதாக நினைக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.