தமாகா வந்தால் பரிசீலிக்கப்படும்: முன்னாள் தமிழக காங்.தலைவர் திருநாவுக்கரசர்

சென்னை:

திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு தமாகா வந்தால் பரிசீலனை செய்யப்படும் என்று தமிழக முன்னாள் தமிழக காங்.தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக திமுக, அதிமுக தலைமையில் கூட்டணி உருவாகி உள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி இறுதி செய்யப்பட்டு விட்டது. ஆனால், அதிமுக கூட்டணியில் தேமுதிக, தமாகா இணையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இழுபறி நீடித்து வருகிறது.

இந்த நிலையில்  புதுக்கோட்டையில்  செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர்,  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிட உள்ள இடங்கள் குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றவர், தமிழகத்தில் காலியாக உள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தலையும் சேர்த்து நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

மேலும்,  காங்கிரஸ் கட்சியில் இருந்துபிரிந்து சென்ற தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, காங்கிரஸுடன் இணைவதற்கோ, கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடவோ தயாராக இருந்தால் அதுகுறித்து கட்சியின் மேலிடம் பரிசீலித்து முடிவெடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.