அமைச்சர்களே மொழிபெயர்த்தால்… நகைச்சுவை கட்டுரை; ஏழுமலை வெங்கடேசன்

மைச்சர்களே மொழிபெயர்த்தால்…

கைச்சுவை கட்டுரை; ஏழுமலை வெங்கடேசன்

டாக்டர் ராமதாஸ் வினாத்தாள்

தமிழ்நாட்டில் தமிழ் மொழியில் வினாத்தாள்களை தயாரித்து போட்டித்தேர்வுகளை நடத்த முடியாவிட்டால் டிஎன்பிஎஸ்சி அமைப்பையே மூடிவிடலாம் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடுமையாக சாடியிருக்கிறார்..

ராமதாசின் கோபம் நியாயமானதே.. ஆனால் ராமதாசுக்கு பதிலடி கொடுக்கிறோம் என்று அமைச்சர்களே வினாத்தாள் விடைத்தாள்களை தயாரிக்க ஆரம்பித்துவிட்டால்.. அதை நினைத்தாலே மரண பீதி நமக்குள் வந்துவிடுகிறது.   இருந்தாலும், இங்லீஷில் தயாரான கேள்விக்கு தமிழில் மொழிபெயர்ப்பவர், அதற்கு விடை தயாரிப்பவர் என இரண்டு அமைச்சர்களை களமிறங்கி வெறும் சாம்பிளுக்கு கேள்வி பதிலை உருவாக்கி நிலைமையே பார்ப்போம்..தேறினால் மேற்கொண்டு போவோம்

Was our former prime minister Jawaharlal Nehru born with silver spoon? (ஒரிஜினல் அர்த்தம்… முன்னாள் பிரதமர் ஜவஹார் லால் நேரு செல்வச்செழிப்போடு பிறந்தாரா? வெல்லூரார் மொழிபெயர்ப்பு…. நமது முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு வெள்ளி கரண்டியோட பிறந்தாரா? சிடம்பூர் ராஜு பதில்… இல்லைவேயில்லை.. கொஞ்சம் மார் சளியோடத்தான் பிறந்தார்.

Is it proper way put the fire out with petrol or diesel? (தீயை பெட்ரோல் அல்லது டீசல் கொண்டு அணைப்பது சரியான வழியா) பெட்ரோல் அல்லது டீசலுடன் தீயை வெளியே வைப்பது சரியான வழியா? இல்.லை. பெட்ரோலை உள்ளே வைத்து அதில்தான் தீயை போடவேண்டும்

What is the different between four hundred and five hundred ? (நான்கு நூறுக்கும் ஐந்து நூறுக்கும் இடையே என்ன வித்தியாசம்?) நாநூறுக்கும் ஐநூறுக்கும் இடையே என்ன வித்தியாசம்..? நான் நூறு என்பதன் சுருக்கமே நாநூறு. ஐ நூறின் தமிழாக்கமும் நான் நூறு என்பதே. ஆகையால் எந்த வித்தியாசமும் இல்லை.

Has Rosy ever read between the lines with her class teacher ? (வகுப்பு ஆசிரியையுடன் ரோஸி எப்போதாவது குதர்க்கமாக பேசியிருக்கிறாளா) எப்போதாவது ரோஸி அவளுடைய வகுப்பு ஆசிரியையுடன் வரிகளுக்கிடையே படித்திருக்கிறாளா? பள்ளி ஆசிரியை வரிகளை செலுத்தாததால் ரோஸியால் வரிகளுக்கு இடையே படிக்கமுடியவில்லை.

When and where did Rajaji”s marrige happen? (ராஜாஜி அவர்களின் திருமணம் எங்கே எப்போது நிகழ்ந்தது?) ராஜாஜிக்கி திருமணம் எங்கே எப்போது நடந்தது..? பாடகி ஜிக்கி கழுத்தில் பாடகர் ராஜா தாலிகட்டிய நேரத்தில் நடந்தது..

In which situation did Ramu feel his better half as a snake in the grass ? (எந்த தருணத்தில் ராமு அவனது மனைவியை துரோகியாக கருதினான்) ராமு அவனது நல்ல பாதியை எந்த சந்தர்ப்பத்தில் புல்வெளிக்குள் பாம்பாக பார்த்தான்? மிகவும் ஆபாசமான கேள்வி என்பதால் இதற்கு பதில் அளிக்கவிரும்பவில்லை