சென்னை:

மிழகத்தில் ஜனவரி 1ந்தேதி முதல் குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று  சட்ட முன்வடிவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உலகம் முழுவசூதும் பிளாஸ்டிக் மாசுவை கட்டுப்படுத்தும் நோக்கில்  பல நாடுகளில்  பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலும் பல்வேறு மாநிலங்களில் குறிப் பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஜனவரி  1ந்தேதி முதல்  குறிப்பிட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில்,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் வரை அபராதம் வசூலிக்க வகை செய்யும் சட்ட முன்வடிவு சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்ட முன்வடிவை அமைச்சர் வேலுமணி பேரவையில் தாக்கல் செய்தார்.

இந்த சட்ட முன்வடிவில்,   தொடர்ந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன் படுத்தினால், பயன்படுத்தும் வணிகர்களின்  வணிக உரிமை ரத்து செய்யப்படும் என்றும்,  தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்தல், வழங்குதல், கொண்டு செல்லுதலும் தண்டனைக்கு உரிய குற்றம் என்றும், மீறி உபயோகப்படுத்துபவர்களுக்கு ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவது முதல் முறை கண்டுபிடிக்கப்பட்டால்  ரூ.25,000, 2வது முறை ரூ.50,000, 3வது முறை பயன்படுத்தினால் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும்,  பிளாஸ்டிக் சேமித்தல், வழங்குதல், கொண்டுசெல்லுதல், விற்பனை, பகிர்ந்தளித்தால் ரூ.1 லட்சம் வரை அபராதம் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது.