வாஷிங்டன்: இந்தியா – சீனா எல்லை பிரச்னைக்கு தீர்வு காண, தான் உதவ தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி உள்ளார்.

இந்தியா – சீனா இடையே, லடாக் பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பல கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பலனாக, இரு நாடுகளும் எல்லையில் மேலும் படைகள் குவிக்கப்படாது என்று ஒப்புக் கொண்டன.

இந்நிலையில், வெள்ளை மாளிகையில், செய்தியாளர்களை சந்தித்த, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியதாவது: இந்தியா – சீனா இடையிலான பிரச்னை, மிக தீவிரமாக இருக்கிறது.

அதை, இரு நாடுகளும், சுமுகமாக தீர்த்துக் கொள்ளும் என்று நான் நம்புகிறேன். இந்த பிரச்னையில் உதவி தேவைப்பட்டால், அதை முழு மனதுடன் செய்ய தயாராக உள்ளேன என்று கூறினார்.