கொச்சின்

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டம் நிறைவேற்றப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் வருடம் மகளிருக்கு நாடாளுமன்றத்தில் மாநில சட்டப்பேரவைகளிலும் 33% இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட்டது. இன்று வரை அந்த மசோதா நிறைவேற்றப் பட்டாமல் உள்ளது. இந்த மசோதாவுக்கு ஆரம்பம் முதலே காங்கிரஸ் கட்சி ஒப்புதல் அளிக்க தயாராக இருந்தது.

இந்த வருடம் நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான பிரசாரம் அனைத்து மாநிலங்களிலும் தீவிரமாக நடந்து வருகின்றன. காங்கிரஸ் கட்சி சார்பில் கேரள மாநிலம் கொச்சின் நகரில் நடந்த மாபெரும் பேரணியில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி கலந்துக் கொண்டார்.

பேரணியில் கலந்துக் கொண்ட ராகுல் காந்தி தமது உரையில், “நாங்கள் வரும் 2019ஆம் வருடம் தேர்தலில் வெற்றி பெற்றதும் முதல் பணியாக நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கிட்டு சட்ட மசோதாவை நிறைவேற்றுவோம் கடந்த 2010ஆம் வருடம் முதல் இந்த மசோதா மக்களவையில் யாராவது எதிர்ப்பு தெரிவிப்பதால் நிறைவேற்றப் படாமல் உள்ளது.

நான் ஏற்கனவே கடந்த வருடம் பிரதமருக்கு இந்த மசோதாவுக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு அளிக்கும் என கடிதம் எழுதி உள்ளேன். ஆனால் இன்று வரை அந்த மசோதா நிறைவேற்றப்படாமல் உள்ளது. வர உள்ள நாடாளுமன்றத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். நாங்கள் அரசியலில் மகளிர் தலைமைய எதிர்ப்பார்க்கிறோம்.

பிரதமர் மோடி தனது நண்பர்கள் 15 பேருக்கு அதிக பட்ச வருமான உறுதியை அளித்துள்ள்ளார். நீங்களும் அனில் அம்பானியாக இருந்திருந்தால் உங்களுக்கும் அவர் அதிக பட்ச வருமான உறுதியை அளித்திருப்பார். ஆனால் எனது நண்பர்களான ஏழை மக்களுக்கு நான் குறைந்த பட்ச வருமான வாக்குறுதியைத் தான் அளித்துள்ளேன்” என தெரிவித்துள்ளார்.