மது விற்பனையை நிறுத்தினால் மக்கள் உடல்நலம் கெடும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

ஸ்ரீவில்லிபுத்தூர்

து விற்பனையை நிறுத்தினால் மற்ற மாநிலங்களுக்கு சென்று குடித்து மக்கள் உடல் நலத்தை கெடுத்துக் கொள்வார்கள் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மது விற்பனையை நிறுத்த வேண்டும் என பல அரசியல் தலைவர்கள் கூறி வருகின்றனர். ஆனால் ஆளும் அதிமுக அர்சு அதற்கு செவிசாய்க்காமல் உள்ளது. இந்நிலையில் நேற்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ”தேர்தலில் கூட்டணி அமைக்க அனைத்துக் கட்சியினரும் முயன்று வருகின்றனர். அதுபோலதிமுகவை பொறுத்தவரை வரும் நாடாளுமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்து வெற்றி பெற எடப்படி பழனிச்சாமியும் முயன்று வருகிறார்.

தங்கத் தமிழ்ச் செல்வன் அதிமுக ஆட்சி நடைபெறுவதால் இடைதேர்தல் நடக்காது என பேசி வருகிறார். அதாவது குளறுபடிகள் எதையாவது செய்து அவர்கள் இடைத்தேர்தலை நிறுத்த எண்ணுகின்றனர். ஆனால் தேர்தல் ஆணையம் அதை வேடிக்கை பார்க்காது. இன்னும் 2 ஆண்டு அல்ல இரண்டாயிரம் ஆண்டு ஆனாலும் அதிமுக ஆட்சி தொடரும்.

கமலஹாசன் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியை குறை சொல்கிறார். முதலில் ஏதாவது ஒரு தொகுதியில் தேர்தல் வெற்றி பெற்ற பிறகு குற்றம் குறைகளை கூறட்டும். கமலஹாசன் பிக் பாஸ் போல தமிழக அரசியலை நினைத்துக் கொண்டு மீசையை முறுக்குகிறார்.

மது விற்பனையை தமிழகத்தில் நிறுத்த முடியாது. இங்கு மது விற்பனையை நிறுத்தினால் பாண்டிச்சேரி அல்லது கர்நாடகா சென்று மகள் குடித்து விட்டு வந்து உடல் நலத்தை கெடுத்துக் கொள்வார்கள். அரசு மது விற்பனைக்கு என எந்தக் காலத்திலும் இலக்கு நிர்ணயிக்கவில்லை” என கூறினார்.