ஜீயர் உண்ணாவிரதம் குறித்து வைரமுத்து கவிதை எழுதினால் எப்படி இருக்கும் என்று  ஆர்.ஷாஜஹான் (Shahjahan R) அவர்கள் முகநூலில் எழுதியிருக்கும் பதிவு:

“உண்ணாவிரதம்
உடலுக்கு நல்லது.

உண்பதற்கு இல்லாதவர்கள்
உண்ணாதிருப்பதை
உலகம் அறிவதில்லை
ஏனென்றால் இதை
ஊடகங்கள் சொல்வதில்லை.

அன்னைகள் தாம்மட்டும்
உண்ணாதிருந்தாலும்
பிள்ளைக்கு ஊட்டுவார்கள்.
உண்டுவளர்ந்த பிள்ளைகளோ
ஊட்டியவளை மறப்பார்கள்.

ஒற்றைத் தடியுடன்
ஒடிந்துவிழும் உடலுடன்
உண்ணாதிருந்தான் ஒருவன்
நாடு சுதந்திரம் கண்டது.

அந்தோ இன்றுஅது
உண்டு கொழுத்தவர்கள் கையில்
உருண்டு கொண்டிருக்கிறது.

உண்பதற்கு இல்லாதோர் கதைகள்
கள்ளிக்காட்டு இதிகாசமாகும்.

உண்டு களித்தவர்களின் கதைகள்
ஊர் சிரிக்கும் விஷயமாகும்.

உண்ணாவிரதம் நல்லது
ஊருக்காக இருப்பது என்றால்.

உண்ணாவிரதம் நல்லது
ஊளைச்சதை குறைப்பது என்றால்.

உண்ணாவிரதம் நல்லது
உன் குடலுக்குள் கெடுதல் என்றால்.

ஆனால்
சீயர் நினைத்தது
உண்ணாவிரதமல்ல
ஊடக கவனம்.

அதனால்தான்
சீயர் விரதம்
சீயென்றானது.”

(அவங்கவங்க விருப்பம்போல ரெண்டு ரெண்டு தடவை படிச்சுக்கலாம்.)