யோகா போதும் என்றால் ஜிப்மர், எய்ம்ஸ் மருத்துவமனைகளை மூடுங்கள்!: மருத்துவரின் ஆதங்கம்

நெட்டிசன்:

மருத்துவர் கே.எஸ். சரவணன் அவர்களின் முகநூல் பதிவு

யோகா பயிற்றுநரான ஒரு அம்மா சொல்கிறார் “உலகத்தில் உள்ள 95சதவீதம் நோய்களுக்கு காரணம் மன உளைச்சல் ,அழுத்தம் தான் காரணம் ” என்றார்.
அடுத்து யோகா கற்றுக் கொள்ளவதால் பிள்ளைப் பேறு உண்டாகும் என்றார்.
இந்திய மருத்துவத்தில் சொல்லப்படும் சுஸ்ருதா சம்ஹிதா கூட ஆபரேசன் தான் செய்தாராம் .
அரசு பேசாமல் AIMS,JIPMER, MMC,உள்ளிட்ட நாட்டின் மிகச் சிறந்த மருத்துவக்கல்லூரிகள் ,மற்றும் நாட்டின் மிகச்சிறந்த மருத்துவமனைகள் அனைத்தையும் மூடி விட்டு யோகா ஆசாமிகளிடம் ஒப்படைத்து விட்டால் என்ன ?
எனக்குத் தெரிந்து என் பரம்பரையில் ஒருத்தருக்கும் யோகான்ற விசயமே தெரியாது.
என் தாத்தன்,பூட்டன் எல்லாம் கடுமையான உழைப்பாளிகள்.
அவர்களுக்கு எந்த யோகமும் தேவைப்படவில்லை.
தோழர் மதிமாறன் சொன்னது போல உடலுழைப்பு தேவைப்படாத மக்களுக்குத் தான் இந்த யோகம் எல்லாம்.
என்னிடம் சிகிச்சைக்கு வரும் பல வட இந்திய தொழிலாளர்களுக்கு 8packs உடம்பு உள்ளது.எந்த ஜிம்முக்கும் போனதில்லை.கிரியாட்டீன் கருமங்களை தின்றதில்லை.சோறு கூட சரியாக சாப்புடுகிறார்களாக எனத் தெரியாது.
ஆனால் கடுமையான உடலுழைப்பால் உடல் கெட்டிப்பட்டுள்ளது.
அவர்களிடம் யோகா செய்ததுண்டா எனக் கேட்டதற்கு சிரிக்கின்றனர்.
..
நீங்கள் யோகா சர்வரோக நிவாரணி என்று புராடக்ட் புரோமோ பண்ணுவதைப் பார்த்தால் நானும் சிரிக்கின்றேன்.