எனக்கு ஓட்டு போடவில்லை என்றால் தற்கொலை செய்துக்கொள்வேன்: பா.ஜ.க அமைச்சரின் மிரட்டல் பிரசாரம்

ஜெய்ப்பூர்:

க்கள் எனக்கு ஓட்டுப்போடவில்லை என்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று ராஜஸ்தான் பாஜக அமைச்சரும், வேள்பாளருமான  ஒருவர் பொதுமக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரத்தின் போது கூறினார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாஜக ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் டிசம்பர் 7ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதன் காரணமாக அங்கு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் ஆட்சி அமைக்க பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. க தங்கள் ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

200 சட்டமன்றத் தொகுதிகளை கொண்டுள்ள ராஜஸ்தானில் அடுத்த மாதம் டிசம்பர் 7 ஆம் தேதி தேர்தல் நடைபெற விருக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11 ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் அங்கு அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது.

ராஜஸ்தானில் உள்ள சித்தோட்கட் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு இருந்த பாஜக வேட்பாளர்  ஸ்ரீசந்த் கிருப்லானி  என்பவர் தேர்தல் பிரசாரத்தின்போது, கூடியிருந்த மக்களை பார்த்து,  “நீங்கள் எனக்கு  வாக்களிக்கவில்லை என்றால், நான் தற்கொலை செய்துக்கொல்வேன்” என்று மிரட்டும் வகையில் பேசினார். இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்ரீசந்த் கிருப்லானி தற்போதைய ராஜஸ்தான் மாநில அமைச்சராக இருந்து வருகிறார். வசுந்தரா ராஜே தலைமையிலனா அரசவையில் யு.டி.எச் அமைச்சராக பணியாற்றி வருகிறார் ஸ்ரீசந்த் கிருப்லானி ர் நிம் பாஹரா சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் மக்களிடம் எனக்கு வாக்களிக்கவில்லை என்றால் தற்கொலை செய்துகொள் வேன் என்று மிரட்டி வாக்கு சேகரித்து வருகிறார். இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.