ஐதராபாத்:

பாரத் மாதா கி ஜே சொல்லவில்லை என்றால் நீங்கள் பாரதத்தில் இருக்க முடியாது என்று தெலுங்கானா பாஜ எம்எல்ஏ ராஜா சிங் மிரட்டல் விடுத்துள்ளார்.

பரபரப்புக்கு பெயர் போன இவர் ஏற்கனவே தெலுங்கான சட்டமன்ற தேர்தலின்போத, பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் ஐதராபாத் என்ற பெயர் மாற்றப்பட்டு, மீண்டும் பாக்யநகர் என மாற்றப்படும். இதே போன்று செகந்திராபாத் மற்றும் கரீம்நகர் ஆகியவற்றின் பெயர்களும் மாற்றப்படும் என்று கூறி  சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அதுபோல, முஸ்லிம்கள் பயங்கரவாதிகள் அல்ல, ஆனால் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு இந்தியாவில் பிடிபட்டவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் என்றும் தெரிவித்து  சர்ச்சைகளை உருவாக்கி இருந்தார்.

இந்த நிலையில் தற்போது பாரத் மாதா கி ஜே என்று சொல்லவில்லை என்றால் நீங்கள் பாரத நாட்டில் வசிக்க தகுதியற்றவர்கள் என்று கூறி பரபரப்பை உள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தின் தென்மேற்கு நகரமான சோலாப்பூரில்  நடைபெற்ற இந்து ராஸ்டிரா சம்மேளன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தெலுங்கான மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர் ராஜாசிங்,

இந்து மத உணர்வுகளை எதிர்ப்பவர்கள் நாட்டில் இருக்க  முடியாது என்ற எச்சரித்வர், பாரத் மாதா கி ஜே  மற்றும் வழிப்பாட்டுக்குரிய கோமாதாவை மதிக்காதவர்கள் யாரும் பாரதத்தில் இருக்க முடியாது என்று பகிரங்கமாக எச்சரித்தார்.

“இந்தியா என்பது இந்துக்கள்  பெரும்பான்மையிராக உள்ள நாடு என்றும், அது  இந்தியர்களாக தங்களை  அடையாளப்படுத்த விரும்பும் அனைவருக்கும் இந்துக்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும்” என்றார்.

அயோத்தியில் உள்ள ராம் கோயிலின் கட்டுமானத்தை எதிர்ப்பவர்கள் நாட்டின் சொந்த வேர்களை மறுக்கிறார்கள்  என்றவர், சத்ரபதி சிவாஜியைப் போல் நாட்டிலுள்ள இளைஞர்களும் அடித்து நொறுக்குவதற்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

ராஜாசிங்கின் பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.