Random image

மகாராஷ்டிரா: காதலை ஏற்க மறுக்கும் பெண்ணை கடத்தி வந்து காதலனிடம் ஒப்படைப்பேன்….பாஜக எம்எல்ஏ பேச்சு

மும்பை:

காதலை ஏற்க மறுக்கும் பெண்ணை கடத்தி வந்த காதலனிடம் ஒப்படைப்பேன் என்று பாஜக எம்எல்ஏ பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை காத்கோபார் தொகுதி எம்எல்ஏ ராம் கதாம். பாஜக எம்எல்ஏ.வான இவர் மும்பையில் நேற்று நடந்த உறியடி திருவிழாவில் கலந்துகொண்டார்.

உறியடி திருவிழாவில் ஆயிரகணக்கான மக்கள் முன்னிலையில் எம்எல்ஏ பேசுகையில்,‘‘ஒரு பெண்ணிடம் நீங்கள் காதலை தெரிவித்து மறுப்பு தெரிவித்துவிட்டால், என்னிடம் உங்களது பெற்றோருடன் வாருங்கள். அவர்களும் அந்த பெண்ணை விரும்பினால் நான் என்ன செய்வேன் தெரியுமா?. அந்த பெண்ணை கடத்தி வந்து உங்களிடம் ஒப்படைத்து விடுவேன்’’ என்றார். அப்போது அவர் தனது செல்போன் நம்பரையும் தெரிவித்து பேசிய வீடியோ டுவிட்டரில் பரவியுள்ளது.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏ ஜிதேந்திர அவ்காத் கூறுகையில்,‘‘ஒரு ஆளுங்கட்சியின் எம்எல்ஏ இப்படி பேசினால் இந்த நாட்டில் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருப்பார்கள்?’’ என்று டுவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார்.