Random image

குறைந்த விலைக்கு 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன்?….காங்கிரஸ் கேள்வி

டில்லி:

குறைந்த விலைக்கு 36 ரபேல் விமானங்கள் மட்டும் வாங்குவது ஏன்? என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் அந்தோணி கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் ஒரு ரபேல் விமானம் ரூ.526 கோடிக்கு வாங்குவது என முடிவு செய்யப்பட்ட நிலையில் 2014-ல் பா.ஜ.க.வின் மோடி அரசு பொறுப்பேற்றதும் ரபேல் விமான ஒப்பந்தத்தில் சில விதிகளை மீறி பிரான்ஸ் அரசுடன் ஒரு விமானத்தின் விலையை ரூ.1,670 கோடி என நிர்ணயித்து ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளது என காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் பா.ஜ.க இதை தொடர்ந்து மறுத்து வருகிறது.

இந்நிலையில் மத்திய அரசு வாங்கும் ரபேல் விமானம் விலை குறைவு என்றால் 37 ரபேல் விமானங்களை மட்டும் வாங்குவது ஏன்? என காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. இது குறித்து முன்னாள் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி கூறுகையில்,‘‘ மோடி அரசு தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் செய்து கொண்டுள்ளது. 2000-ம் ஆண்டே இந்திய விமானப்படைக்கு 126 விமானங்கள் வேண்டும் என்று மதிப்பிடப்படது.

ஆனால் தற்போது எல்லையில் அதிகப்படியான எச்சரிக்கையை எதிர்க்கொள்ள வேண்டிய நிலை உள்ளது. மோடி அரசு தேச பாதுகாப்பில் சமரசம் செய்துக்கொண்டுள்ளது. நாங்கள் வாங்கும் விமானங்களின் விலை குறைவுதான் என்று பாஜக.வினர் கூறி வருகின்றனர். அப்படியென்றால் வெறும் 36 விமானங்களை மட்டும் ஏன் வாங்க வேண்டும்?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.