டில்லி,

ர்வதேச இந்திய திரைப்பட விழாவின் (IFFI) தலைமை நடுவராக இருந்த, இயக்குனர் சுஜாய் கோஷ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திரைப்பட விழாவுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள பட்டியலில் இருந்து இரண்டு படங்களை நீக்க மத்திய அரசு வலியுறுத்தியதால் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஆண்டுதோறும் சர்வதேச திரைப்பட விழாவில் நடைபெறுவது வழக்கம். அதுபோல இந்த ஆண்டு  இறுதியில் சர்வதேச திரைப்பட  விழா நடைபெற உள்ளது.

மத்திய அரசின்  தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ்  இந்த விழா நடைபெறும்.  இந்த மாதம் 20ந்தேதி முதல் 28ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த விழாவில், கலந்துகொள்ள  இருக்கும் திரைப்படங்களை தேர்வு  தேர்வு செய்ய 13 பேர் கொண்ட உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தலைவராக பிரபல இயக்குனர் சுஜாய் கோஷ் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்த குழுவினர் தங்களது பணிகளை செவ்வனே செய்து, சிறந்த படங்களை தேர்வு செய்து அதுகுறித்து, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தது.

அவர்கள் அனுப்பி உள்ள திரைப்பட பட்டியலில், மலையாள படமான துர்கா படமும், நியூடு என்ற மராத்தி படமும் இடம் பெற்றுள்ளது.

இந்த இரண்டு படங்களையும் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டு மற்ற படங்களை திரையிட மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதற்கு கண்டனம் தெரிவித்து, சுஜாய் கோஷ் தனது பதவியை  ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது, தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டேன். அது உண்மையே. ஆனால் மற்ற காரணங்களை தற்போது கூற விரும்பவில்லை என்றார். என்னைப்போன்றே மற்ற உறுப்பினர்களும் தங்களது அதிருப்தியை மத்திய தகவல் ஒலிபரப்புதுறைக்கு தெரிவித்துள்ளர்.

இவ்வாறு அவர் கூறினார்.