பெண் எஸ்பி பாலியல் புகார்…ஐஜி முருகன் மீதான விசாரணைக்கு தடை
சென்னை:
பெண் எஸ்பி.க்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் ஐஜி மீது தொடரப்பட்ட வழக்கில் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் எஸ்பி அளித்த பாலியல் புகாரின் பேரில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு பிரிவு ஐஜி முருகன் மீது சிபிசிஐடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர் மீது இந்திய தண்டனை சட்டம் 341, 354, 509 மற்றும் பெண் வன்கொடுமை தொடர்பாக பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முருகன் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தன் மீதான நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரி முருகன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ் மற்றும் கல்யாணசு ந்தரம் ஆகியோர் முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.
விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் முருகன் மீதான நடவடிக்கைளுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கு தொடர்பாக மீடியாக்கள் எவ்வித செய்திகளையும் வெளியிடக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.