சென்னை:

மிழக கோவில்களில்இருந்து திருட்டு போன சிலைகளை கண்டுபிடித்து பரபரப்பை ஏற்படுத்திய ஐ.ஜி. பொன். மாணிக்கவேலுக்கு பணி ஓய்வு வழங்கி, தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.

சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை உச்சநீதி மன்ற அமர்வின் உத்தரவின்பேரில் ஐ.ஜி. பொன் மாணிக்க வேல் விசாரித்து வருகிறார். இவரது பதவிக்காலம் கடந்த ஆண்டே முடிவடைந்த நிலையில், அவருக்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, அவரது பதவிக்காலம் இன்றுடன்  முடிவடைகிறது. இந்த நிலையில், சிலை கடத்தல் தடுப்பு தொடர்பான ஆவனங்களை தமிழகஅரசின்  சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபியிடம் ஒப்படைக்க தமிழக அரசு ஆணையிட்டது.

ஆனால், அதை ஏற்கன பொன்மாணிக்க வேல் தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழகஅரசு உச்சநீதி மன்றத்தை நாடியது.உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷன், எம்.ஆர்.சா அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி,  இந்த வழக்கில் தற்போது, எந்த உத்தரவும் தற்போது பிறப்பிக்க முடியாது என்றும், சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை பொன்.மாணிக்க வேல் அவரது உயர்அதிகாரியான  ஏ.டி.ஜி.பி.யிடம்  தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை  டிசம்பர் 2ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதற்கிடையில், பொன்.மாணிக்க வேலுக்கு தமிழகஅரசு ஓய்வு வழங்கக்கூடாது என்று தாக்கல் செய்யப்பட்ட மனுவையும் விசாரிக்க உச்சநீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், பொன்.மாணிக்க வேல்  இன்றுடன் பணி ஓய்வு பெறுவதாக தமிழகஅரசு அரசாணை வெளியிட்டு உள்ளது.