Random image

ஸ்ரீரங்கம் கோவில் சிலை கடத்தல் வழக்கு: ஐ.ஜி.பொன்.மாணிக்கவேல் ஆய்வு

சென்னை:

ஸ்ரீரங்கம் கோவில் சிலை காணாமல் போனதாக தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதி மன்ற உத்தரவுபடி ஐ.ஜி.பொன் மாணிக்க வேல் இன்று ஆய்வு நடத்தி வருகிறார். இதன காரணமாக கோவில் அலுவலர்களிடையே பரபரப்பு நிலவி வருகறது.

திருச்சி அருகே உள்ள பிரபலமான ஸ்ரீரெங்நாதர் ஆலயத்தில் சிலை திருடப்பட்டுள்ளதாக  ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து, ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று  சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வு தீர்ப்பு கூறியிருந்தது.

இந்த நிலையில், உயர்நீதி மன்ற உத்தரவுபடி ஐ.ஜி.பொன்மாணிக்க வேல் இன்று கோவிலில் ஆய்வு செய்து வருகிறார்.  இதன் காரணமாக கோவில் அர்ச்சகர்கள், அலுவலர்கள், அதிகாரிகள் அனைவரும்  பதபதப்புடனும், பரபரப்புடனும் காணப்படுகின்றனர்.