நமக்கு ஓட்டுப்போடாத கிராமங்களை புறக்கணியுங்கள்! சந்திரபாபு நாயுடு கோபம்!

--

கர்னூல்,

கிராமங்களுக்கு தேவையான உதவிகளை அரசு  செய்யும்போது, அவர்களை நமக்கு வாக்களிக்க கேளுங்கள், அப்படி, நமக்கு  வாக்களிக்க விரும்பாத கிராமங்களை புறக்கணிக்கவும் தயங்காதீர்கள் என்று கூறியுள்ளார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.

ஆந்திராவில் சந்திரபாபுவின் தெலுங்குதேச கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக சந்திரபாபு நாயுடு உள்ளார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கோட்டையான  கர்னூல் மாவட்டத்தில், ஒய்எஸ்ஆர் நந்தியாலா சட்ட மன்ற உறுப்பினர்  பூமா நாகிரெட்டி காலமானதை தொடர்ந்து, அந்த தொகுதிக்கு  இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

தொகுதியை கைப்பற்றும் எண்ணத்தில், சந்திரபாபு நாயுடு மறைந்த நாகிரெட்டியின் மகள் அகிலா பிரியாவுக்கு தெலுங்கு தேச மந்திரி சபையில் இடம்கொடுத்துள்ளார் சந்திரபாபு நாயுடு.

இதைத்தொடர்ந்த  தொகுதியை கைப்பற்ற தெலுங்கதேச கட்சிக்கும், ஒய்எஸ்ஆர் காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நந்தியாலா தொகுதிக்குட்பட்ட தெலுங்குதேச கட்சி நிர்வாகிகளின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார் சந்திரபாபு நாயுடு.

இந்த கூட்டத்தில் பேசிய நிர்வாகிகளுடன் பேசிய சந்திரபாபு நாயுடு,

நமது ஆட்சியின்போதுதான் கிராமங்களில்  தரமான ரோடுகள் போடப்பட்டுள்ளது, பென்சனர்களுக்கு தவறாமல் பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 200 ரூபாய் வழங்கப்பட்டு வந்த பென்சன்  ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு 1.50 லட்சம் வரையிலான விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கிராம பகுதி மாணவர்களுக்கு கல்வியில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

இப்படி நமது அரசு செய்துள்ள  ஏராளமான வசதிகளை அனுபவித்து வரும் இந்த தொகுதி மக்கள் நமக்கு ஓட்டுப்போட விரும்பாதது ஏன் என்று  மக்களிடம் கேளுங்கள் என்று கட்சி நிர்வாகிகளிடம் கூறினார்.

மேலும், நமது ஆட்சியின் வசதிகளை அனுபவித்துவிட்டு, நமக்கு ஓட்டுப்போட பகுதி கிராம மக்கள் விரும்பவில்லை என்றால், அந்த கிராமங்களுக்கு எந்தவித வசதிகளும் செய்யாமல் புறக்கணியுங்கள் என்றும்,

தெலுங்கு ஆட்சி பிடிக்கவில்லை என்றால் ஆட்சியின் பென்சன் போன்ற சலுகைகளை பெற வேண்டாம், தெலுங்கு தேச ஆட்சியில் போடப்பட்ட ரோடுகளை உபயோகிக்காதீர்கள்  என்று அதிரடியாக  கூறியுள்ளார்.