பெண்களுக்கு பாதுகாப்பில்லை: கர்நாடக அரசு மீது மேனகா பாய்ச்சல்

டில்லி:

பெங்களூருவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கர்நாடக மாநில அரசு மீது  மேனகா காந்தி  குற்றச்சாட்டு கூறி உள்ளார்.

பெங்களூருவில் சமீபத்தில், வாடகை காரில் சென்ற பெண்ணிடம், கார் ஓட்டுனர் தவறாக நடக்க முயற்சி செய்ததாக புகார் எழுந்தது. ஏற்கனவே இதுபோல பல சம்பவங்கள்  பெங்களூருவில் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் மேனகாக காந்தி இதை குறிப்பிட்டு அரசை கடுமையாக சாடி உள்ளார்.

மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சரான மேனகா காந்தி, இதுகுறித்து தனது  டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதில், கர்நாடக மாநில அரசு  பெங்களூருவில் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை என்றும்,  இந்த நிகழ்ச்சி மூலம் கர்நாடக அரசு பெண்களின் பாதுகாப்பில் உரிய அக்கறை செலுத்தவில்லை என தெரிகிறது. எனவே, இதுபோன்ற முக்கியமான விஷயத்தில் முதல் அமைச்சர் குமாரசாமி கவனம் செலுத்த வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

You may have missed