ம்மு

ம்மு வில் உள்ள ஐ ஐ ஐ எம் மற்றும் ரிலையன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து கொரோனா பரிசோதனைக் கருவி ஒன்றைக் கண்டுபிடிக்க உள்ளன.

தற்போது கொரோனாவுக்கு தடுப்பூசி மருந்து கண்டுபிடிக்கப்படாததால் பரிசோதனை, தனிமைபடுத்தல்  ஆகியவை அவசியமாகி உள்ளது. எனவே நாடெங்கும் பரவி வரும் கொரோனாவை கண்டறியப் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் எனப் பலரும் கூறி வருகின்றனர்.  இதையொட்டி சோதனைக் கருவிகள் உற்பத்தியை அதிகரிக்க அறிவியல் மற்றும் தொழில்துறை ஆய்வுக் குழு உத்தேசித்தது.

ஜம்மு வில் உள்ள ஐ ஐ ஐ எம் என்னும் பயிற்சி நிறுவனம் குழுவின் கீழ் இயங்கி வருகிறது.  இந்த நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய கொரோனா பரிசோதனைக் கருவியை உருவாக்க  புரிந்துணர்வு ஒப்பந்தம் இட்டுள்ளது.   இந்த  ருவி ரிவர்ஸ் டிரான்ஸ்கிரிப்டேஸ் லாம்ப் மெடிகல் என்னும் ஒளியின் அடிப்படையில் சோதனை நடத்துகிறது.

இது ஒரு துரித சோதனை கருவியாகும்.  சோதனை முடிவுகள் 45 முதல் 60 நிமிடங்களுக்குள் கிடைக்கும் எனவும் சோதனைக் கட்டணம் மிகவும் குறைவாக இருக்கும் எனவும் கூறபடுகிராது.க்   இந்த சோதனைக் கருவிகள் முழுக்க முழுக்க  இந்திய உதிரிப் பாகங்களால் உருவாக்கப்பட உள்ளன.   இந்த ஆர் டி லாம்ப் சோதனை செய்ய அதிக திறமை உள்ள ஊழியர்கள் தேவை இருக்காது.

இந்த சோதனைகளை நடமாடும் சோதனை நிலையங்களிலும், விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிறுத்தம் போன்ற பொது இடங்களில் முகாம்கள் அமைத்து நடத்த முடியும் எனக் கூறப்படுகிறது.

தற்போது கோரொனவுக்கு பிசிஆர் சோதனை நடத்தப்படுகிறது.  இவற்றுக்கு அதிகம் செலவாகும் மேலும் திறமை உள்ள ஊழியர்களின் தேவை இருக்கும்.  இந்த சோதனையில் உடனடியாக முடிவுகள் கிடைக்காது என்பதும் தனிமை முகாம்கள், விமானம் மற்றும் ரயில் நிலையங்களில் நடத்த முடியாது.