முன்னேறி வரும் பலகலைக்கழக பட்டியலில் இடமில்லை : சென்னை ஐஐடி ஏமாற்றம்

சென்னை

முன்னேறி வரும் பல்கலைக்கழக பட்டியலில் இடம் அளிக்காதது ஏமாற்றம் அளிப்பதாக சென்னை ஐஐடி தெரிவித்துள்ளது.

முன்னேறி வரும் பல்கலைக்கழக பட்டியலில் இடம் பெற நாடெங்கும் இருந்து 114 விண்ணப்பங்களை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் பெற்றது. அதில் ஐஐடி சென்னை, ஐஐஎஸ், ஐஐடி காரக்ப்புர், ஐஐடி மும்பை, சென்னை அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல புகழ் பெற்ற பல்கலைக்கழகங்கள் விண்ணப்பித்திருந்தன. அதே போல பல தனியார் பல்கலைக்கழகங்களும் விண்ணப்பம் செய்திருந்தன.

அதில் இருந்து மூன்று பொது மற்றும் மூன்று தனியார் பலகலைக்கழகங்களை மட்டும் மத்திய மனித வளத்துரை அமைச்சாகம் தேர்ந்தெடுத்தது. அந்த தேர்வு அறிக்கையில் ஐஐஎஸ், ஐஐடி மும்பை மற்றும் ஐஐடி டில்லி ஆகியவை உலக பல்கலைக்கழக தர நிர்ணயம் 2018ல் அறிவித்தபடி உள்ளதாக தெரிவிக்கபட்டது. இது சென்னை ஐஐடி நிர்வாகத்துக்கு கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

இது குறித்து சென்னை ஐஐடி தலைவரும் பிரபல தொழிலதிபருமான பவன் கோயங்கா, “சென்னை ஐஐடி நாட்டின் மிகச் சிறந்த பொறியியல் கல்வி மைய பட்டியலில் தொடர்ந்து 2 ஆம் இடம் பெற்று வருகிறது. பல்கலைக்கழக மானிய வாரியம் பரிந்துரைத்த அனைத்து இனங்களும் இங்கு முழுமையாக கடைபிடிக்க படுகிறது.

அப்படி இருக்க ஒரு வர்த்தக நிறுவனம் பரிந்துரையின் படி பல்கலைக்கழகங்களை தேர்ந்தெடுத்தது எங்களுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த தேர்வு அரசின் எந்த ஒரு பரிந்துரையின் அடிப்படையிலும் நடக்கவில்லை என தேர்வு கமிட்டியின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. இது மிகவும் துரதிருஷ்டவசமானது.”என மத்திய மனித வளத்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளார்.

இது போல பல அரசு பல்கலைக்கழகங்கள் தங்களை தேர்ந்தெடுக்காததற்கு வருத்தம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆயினும் அதை வெளிப்படையாக எடுத்துரைத்தது சென்னை ஐஐடி மட்டுமே ஆகும்.

இந்த கடிதம் குறித்து கோயங்கா கருத்து தெரிவிக்க மறுத்துள்ளார். ஆயினும் இந்த கடிதத்தின் நகலை அவர் நிர்வாக கூட்டத்தில் வெளியிட்டுள்ளார்