இந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம்!

சென்னை:

ந்தியாவின் சிறந்த கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. இது தமிழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.

இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. இதில், சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது.

கிண்டியில் உள்ள  அண்ணா பல்கலைக்கழகம் 7வது இடத்தையும்,  கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 14வது இடத்தையும், சென்னை பல்கலைக்கழகம்  20 வது இடத்தையும் பிடித்து உள்ளது.

மேலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்காகம்  28 வது இடத்தையும்,  எஸ்.ஆர்.எம் பல்கலை (சென்னை ) – 32 வது இடத்தையும் பிடித்துள்ளன.