பொருளாதார முடக்கத்திலும் டெல்லி-ஐஐடி மாணாக்கர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள்!

புதுடெல்லி: கொரோனா ஊரடங்கால், தேசியப் பொருளாதாரம் உட்பட, உலகப் பொருளாதாரமே ஆட்டம் கண்டுள்ள நிலையில், கேம்பஸ் வேலைவாய்ப்பில் தனது முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளது டெல்லி ஐஐடி.

இந்தாண்டு, பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்கள் மூலம், 1100க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகள், டெல்லி – ஐஐடி பட்டதாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

வேலைவாய்ப்பு சேவைகள் அலுவலகத்தின் தலைவர் தர்மராஜன், “வேலைவாய்ப்பு வழங்குதலில் முந்தைய ஆண்டுகளின் சாதனைகளை முறியடித்துள்ளது ஐஐடி-டெல்லி. இந்தாண்டிற்கான வேலை வாய்ப்பு 4% அதிகரித்துள்ளன.

இக்கல்வி நிறுவனத்தின் வேலைவாய்ப்பு சேவைகளில் பங்கேற்ற இளநிலை மற்றும் முதுநிலை மாணாக்கர்களில், 85.6% பேர் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனர்” என்றுள்ளார் அவர்.

“அதேசமயம், உயர்கல்வி, ஆய்வு, சிவில் சர்வீஸ் தேர்வுகள் மற்றும் தொழில் துவக்குதல் போன்ற விருப்பங்களை வைத்துள்ள பிற மாணாக்கர்கள், தங்களின் சொந்த தொடர்புகள் மற்றும் முயற்சிகளின் மூலம் வேலைவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்” என்றும் அவர் கூறியுள்ளார்.

கார்ட்டூன் கேலரி