டெல்லி: கடந்த 5 ஆண்டுகளில் ஐஐடியில் இருந்து 7, 248 பேர் படிப்பை பாதியில் நிறுத்தி இருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறியுள்ளது.

இதுதொடர்பான தகவலை, லோக்சபாவில் மனிதவள மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது. மொத்தம் 7, 248 மாணவர்கள் ஐஐடியின் பிடெக் படிப்பில் இருந்து வெளியேறி இருக்கின்றனர்.

இது கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட புள்ளி விவரங்களாகும். அதன் பிறகு அவர்கள் பிஎஸ்சி பட்டப்படிப்பில் சேர்ந்திருக்கின்றனர். படிக்கும் தருணத்தில் ஏற்படும் அழுத்தங்களே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

2 ஆண்டுகளில் 2,000 மாணவர்கள் ஐஐடியில் இருந்து வெளியேறி இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக, 2 ஆண்டுகளில் டெல்லி மற்றும் கோரக்பூர் ஐஐடியில் இருந்து மட்டும் 1,400 பேர் பாதியில் கல்வியை கைவிட்டுள்ளனர்.

கடந்த 2018ம் ஆண்டு 11,000 மாணவர்கள் ஐஐடியில் பட்டப்படிப்பு மற்றும் பட்டமேற்படிப்புகளில் சேர்ந்திருக்கின்றனர். படிப்புக்கு பிறகு வேலைவாய்ப்புக்கான உறுதி இல்லாததால் அவர்கள் இந்த முடிவை எடுத்திருக்கின்றனர் என்று மத்திய அரசு கூறி இருக்கிறது.