நீரை சுத்திகரிக்க நாவல்பழ விதைகள் : ஐதராபாத் ஐ ஐ டி கண்டுபிடிப்பு!

தராபாத்

குடிநீரில் உள்ள ஃப்ளோரைடை நாவல் பழ விதைகள் மூலம் நீக்க முடியும் என ஐதராபாத் ஐ ஐ டி கண்டுபிடித்துள்ளது.

நமது நாட்டில் முக்கியமான குடிநீர் ஆதாரம் நிலத்தடி நீர் ஆகும்.  நாட்டில் உள்ள பல இடங்களில் நிலத்தடி நீரில் ஃப்ளோரைட் அதிக அளவில் உள்ளது.  உலக சுகாதார அமைப்பின்படி குடிநீரில் ஃப்ளோரைட் இருக்க வேண்டிய அளவானது லிட்டருக்கு 1.5மிகி ஆகும்.   எனவே சுத்தமான குடிநீர் தேவைக்கு ஃப்ளோரடை அகற்றுவது அவசியமான ஒன்றாகும்.   தற்போது செயற்கையாக தயாரிக்கப்படும் கார்பன் மூலம் இந்த ஃப்ளோரடை நீக்க பல வழிமுறைகள் செயல் பட்டு வருகின்றன.

தற்போது ஐதராபாத் ஐ ஐ டியை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள்  இந்த ஃப்ளோரடை நீக்க புதிய முறை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.  நாவல் பழ விதைகளை பொடி செய்து அதன் மூலம் கிடைக்கும் கார்பனைக் கொண்டு ஃப்ளோரைடை நீக்க முடியும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.    நாவல் பழம் என்பது நமது நாட்டில் பரவலாக கிடைக்கும் பழமாகும்.   அந்த பழத்தின் விதைகள் ஏற்கனவே நாட்டு மருந்துகளில் உபயோகப்படுத்தப் பட்டு வருகிறது.

இந்த பரிசோதனை முதலில் செயற்கையாக தயாரிக்கப்பட்ட ஃப்ளோரைட் கலவையில் நடத்தப் பட்டுள்ளது.  அது வெற்றி அடைந்ததால் நாடெங்கும் உள்ள பல நிலத்தடி நீரின் மாதிரிகள் கொண்டுவரப்பட்டு அந்த மாதிரிகளில் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.   பரிசோதனையில் நாவல் விதைகள் மூலமாக ஃப்ளோரைட் நீக்கப்பட்டு உலக சுகாதார அமைப்பு அறிவித்ததை விடவே குறைவாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கண்டுபிடிப்புக்கு நாடெங்கும் உள்ள பல விஞ்ஞானிகளும் சமூக ஆர்வலரும் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.   மேலும் இதே கார்பனைக் கொண்டு குடிநீரில் உள்ள தேவையற்ற மற்றவைகளையும் நீக்க முடியுமா என ஆய்வு நடத்தப் பட்டு வருவதாக ஐதராபாத் ஐ ஐ டி தெரிவித்துள்ளது.