பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு!

டெல்லி: பொறியியல் படிப்புக்கான ஐஐடி ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா  தொற்று பரவல் வரலாறு காணாத அளவில் பரவி வருகிறது. தொற்று பரவல் உச்சம்  பெற்றுள்ளதால், பல்வேறு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், இந்த மாத இறுதியில் நடைபெற இருந்த பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்வும் (மெயின் தேர்வு) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு வரும் 27, 28, 29 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் நடைபெற இருந்தது.  தற்போதையை சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை கூறி உள்ளது.

தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் தேதி அறிவிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.