வேகப் பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ராவின் வெற்றி  ரகசியம்

கான்பூர்:

வேகப்பந்து வீச்சாளர் ஜாஸ்பிரிட் பும்ராவின் வெற்றிக்கான காரணத்தை கான்பூர் ஐஐடி பேராசிரியர் சஞ்சய் மிட்டல் விவரித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறும்போது, கடந்த சில ஆண்டுகளாக ஜாஸ்பிரிட் பும்ராவின் ஆட்டம் சிறப்பாக உள்ளது. ஒரு நாள் போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்.

கடந்த காலங்களில் சிறந்த வேகப் பந்து வீச்சாளர்களின் அவரும் ஒருவர் என நிரூபித்துள்ளார்.
2019 உலகக் கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியிலும் அவர் சாதிப்பார்.

பும்ராவின் பந்து வீச்சு வேகம் நிமிடத்துக்கு 1,000 முறை என்ற சுழற்சியாக(ஆர்பிஎம்) உள்ளது. பந்து வீசும்போதே 0.1 விகிதத்தில் சுழற்றி போடுகிறார்.
இதனால் அவரது பந்து வீச்சை பேட்ஸ்மேன்களால் எதிர்கொள்வது கடினமாக உள்ளது என்றார்.

ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன் அணிக்காக விளையாடி 19 விக்கெட்களை பும்ரா வீழ்த்தினார்.

 

You may have missed