இந்தியாவின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் தேர்வு

டில்லி:

நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை  மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள  நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியாக ஐ.ஐ.டி மெட்ராஸ் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.

அதேபோல் தலைசிறந்த பல்கலைக்கழகமாக இந்தியன் இன்ஸ்டியூட் ஆஃப் சயின்ஸ் பெங்களூரு தேர்வு செய்யப்பட்டுள்ளது. .