சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேலும் ஒரு உறுப்பினர் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். சென்னை ஐஐடி-ன் இயக்குனராக உள்ள பாஸ்கர் ராமமூர்த்தியை மத்திய கல்வி அமைச்சகத்தின் பிரதிநிதியாக மத்தியஅரசு நியமித்து உள்ளது.

மதுரையை அடுத்த  திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூரில் ரூபாய் 1264 கோடி  திட்ட மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப்படும் என கடந்த 2018ம்ஆண்டு  அறிவிப்கப்பட்டு, கடந்த 2019ம் ஆண்டு பிரதமர் மோடியால் அடிக்கல்லும் நாட்டப்பட்டது. அதன்படி,  சுமார் 202 ஏக்கரில் 750 படுக்கை வசதியுடன் 48 மாதங்களில் மருத்துவக்கல்லூரி, மருத்துவமனை  கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்தவொரு பணிகளும் நடைபெற வில்லை.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  திடீரென  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தலைவராக புதுச்சேரி  ஜிப்மர் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.எம். கட்டோச் நியமனம் செய்யப்பட்டார்.  மேலும் 17 பேர் கொண்ட உறுப்பினர் அறிவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்ட நிலையில்,  பாஜகவைச் சேர்ந்த புற்றுநோய் அறுவைசிகிச்சைப் பிரிவு மருத்துவர் சரவணன் சண்முகம் உள்பட 14 பேர் அறிவிக்கப்பட்டனர். மேலும் 3 பேர் இடம் காலியாக இருந்து வந்தது.

இந்த நிலையில், தற்போது, ஐ.ஐ.டி-மெட்ராஸ் இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி   மதுரையில் வரவிருக்கும் எய்ம்1 உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கல்வி அமைச்சின் பிரதிநிதியாக நிறுவன அமைப்பின் ஒரு பகுதியாக இருப்பார் என்று மத்திய அரசு அறிவித்து உள்ளது.