இந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்: மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியீடு

டில்லி:

ந்தியாவின் தலைசிறந்த கல்லூரிகள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இதை  மத்திய மனிதவள மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் ஆரியா ( Atal Ranking of Institutions on Innovation Achievements (ARIIA) வெளியிட்டுள்ளது.

ARIIA தர வரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியாவில் சிறந்த முதல் 10 அரசு கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பிடித்து  உள்ளது.

தனியார் பிரிவுகளில்  வேலூரில் செயல்பட்டு வரும் வி.ஐ.டி. கல்வி நிறுவனம் முதலிடத்தை பிடித்திருக்கிறது. ஆரியாவின் தர வரிசைப் பட்டியலில் ஐஐடி நிறுவனங்களே முன்னணியில் உள்ளன. மொத்தம் 6 ஐஐடி நிறுவனங்கள் அரசு சார்பு பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றன.

ஆரியாவின் (ARIIA-Atal Ranking of Institutions on Innovation Achievements) யின் தர வரிசைப் பட்டியல் (அரசு)

1. ஐஐடி மெட்ராஸ்

2. ஐஐடி பாம்பே

3. ஐஐடி டெல்லி

4. இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சைன்ஸ் பெங்களூரு

5. ஐஐடி காரக்பூர்

6. இந்தியன் கெமிக்கல் டெக்னாலஜி, மும்பை

7. ஐஐடி கான்பூர்

8. ஐஐடி ரூர்கீ

9. பஞ்சாப் பல்கலைக்கழகம், சண்டிகர்

10. ஐஐடி ஐதராபாத்

 ஆரியாவின்  தர வரிசைப் பட்டியல் (தனியார் பிரிவு)

1. வேலூர் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, வேலூர்

2. கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, புவனேஸ்வர்

3. எஸ்.ஆர்.எம். இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் அண்டு டெக்னாலஜி, சென்னை

4. ஜே.எஸ்.எஸ். அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் அண்டு ரிசர்ச், மைசூரு

5. வேல் டெக் ரங்கராஜன் டாக்டர். சகுந்தலா ஆர் & டி இன்ஸ்டிடியூட் ஆஃப் சைன்ஸ் டெக், சென்னை.

மேலும் தகவலுக்கு கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்

https://ariia.gov.in/

Leave a Reply

Your email address will not be published.