சட்டப்பேரவை இடைதேர்தலில் திமுகவுக்கு பாரிவேந்தர் ஆதரவு 

சென்னை

மிநாட்டில் நான்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் ஆதரவு அளித்துள்ளார்.

வரும் மே மாதம் பத்தாம் தேதி அன்று தமிழகத்தில் காலியாக உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு இடை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தல் திருபஙன்க்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி மற்றும் சூலூர் ஆகிய தொகுதிகளில் நடைபெற உள்ளன.

இன்று இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்துக்கு வந்தார். அப்போது அவர் முக ஸ்டாலினை சந்தித்து பேசினார். அதன் பிறகு பாரிவேந்தர் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.

பாரிவேந்தர், “நான் இன்று மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்தேன்.  நடைபெற உள்ள 4 தொகுதிகள் இடைத்தேர்தலில் எங்கள் கட்சியின் ஆதரவு திமுகவுக்கு அளித்துள்ளோம். நான்  இந்த நான்கு தொகுதிகளின் இடைத் தேர்தலில் திமுகவை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளேன்.” என தெரிவித்துள்ளார்