வைக்கோலை பயன்படுத்தி மாசுபாட்டை கட்டுப்படுத்தலாம்: ஐகியா நிறுவனம் புது முயற்சி

டில்லி:

வைக்கோல் போன்ற விவசாயக் கழிவுகளை பயன்படுத்தி இந்தியாவின் மாசுபாட்டை கட்டுப் படுத்தலாம் என கூறியுள்ள  ஐகியா நிறுவனம் தற்போது அதற்கான முயற்சியில் ஆர்வம் காட்டி வருகிறது.

இந்தியாவில் பெரும்பாலான விவசாயிகள் பயிர்கள் அறுவடை முடிந்ததும், அடுத்த விதைப்பு பருவத்திற்கான தங்களது நிலத்தை தயார் செய்வதற்காக வைக்கோல்களை தீ வைத்து எரிக்கின்றனர்.

குறிப்பாக பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்திரப்பிரதேசம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில்  வைக்கோல் எரிப்பதால் ஏற்படும் புகையால், ஒவ்வொரு குளிர்காலத்திலும் டில்லியில் புகை மண்டலம் ஏற்பட்டு சுவாச பிரச்சினைகள் தலைதூக்குகின்றன.

தேவையில்லாமல் எரிக்கப்படும் வைகோல்களை விவசாயிகளிமிருந்து  கொள்முதல் செய்து அதை மூலப்பொர ளாகக் கொண்டு தங்களது பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் என்று ஏற்கனவே கூறிய ஐகியா நிறுவனம் தற்போது, டில்லியில் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில், சில திட்டங்களை வகுத்துள்ளதாக .தெரிவித்துள்ளது.

மேலும், மற்ற பெரு நகரங்களில் வெளியாகும் காற்று மாசுபாட்டை எவ்வாறு குறைப்பது என்பதற்கான ஒரு முன்மாதிரியை உருவாக்குவதே தங்களது தற்போதைய லட்சியம் என அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இதன் முதல்கட்டமாக  நடப்பு ஆண்டின் இறுதிக்குள் வைக்கோலை அடிப்படையாக கொண்ட முன்மாதிரியான பொருட்கள் தயாரிக்கப்பட்டு 2020ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அவை விற்பனை செய்யப்படும் என  ஐகியா கூறி உள்ளது. இதற்காக இந்திய அரசு மற்றும் மத்திய அரசாங்கங்கள், என்.ஜி.ஓக்கள் மற்றும் நிறுவனங்களுடன் ஐகியா நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது.

ஐகியா நிறுவனம் முதன்முதலாக ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் தனது மிகப்பெரிய ஷோரூமை திறந்து பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இந்தியாவில் பல ஷோரூம்களை திறக்கவும் முடிவு செய்துள்ளது.

ஐதராபாத்தில் திறந்துள்ள தங்களது கடையில், ஒற்றை பயன்பாடு பிளாஸ்டிக் பொருட்களின் மீதான உலகளாவிய தடையை நடைமுறைப்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.