100 கோடி மூதலீட்டில் ஐதராபாத்தில் தொடங்கப்பட்ட ஐகியா நிறுவனத்தின் முதல் கடை

ஐதராபாத்:

சுவீடனின் ஐக்கியா நிறுவனத்தின் முதல் கடை ஐதராபாத்தில் திறக்கப்பட்டடுள்ளது. இந்த கடைக்காக சுமார் ரூ.100 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது

ஐக்கியா என்ற நிறுவனம் சுவீடன் நாட்டை சேர்ந்தது. இந்நிறுவனத்தின் சார்பில்  49நாடுகளில் நானூற்றுக்கு மேற்பட்ட கடைகள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில்,  இந்தியாவில் கடை தொடங்க ஐகியா நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே அனுமதி பெற்றது.

இந்த நிலையில், தற்போது தனது நிறுவனத்தின் முதல் கடையை சுமார் 100 கோடி ரூபாய் முதலீட்டில்  ஐதராபாத்தில் திறந்துள்ளது. சுமார் 13ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த கடையில் வீட்டு உபயோகப் பொருட்கள், பர்னிச்சர்கள் உள்பட  7500 வகையான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

அதுபோல, இந்தக் கடையில் அமைக்கப்பட்டுள்ள உணவகத்தில், ஒரே நேரத்தில் ஆயிரம்பேர் அமர்ந்து உண்ணும்  வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது ஐகியா  நிறுவனத்தில் இந்த ஐதராபாத் கடையில்  நேரடியாக 950 பேர் வேலைக்காக பணியமர்த்தப்பட்டுள்ளனர். இந்த கடை வாயிலாக சுமார் 1500 பேர் மறைமுகமாக வேலைவாய்ப்பு பெற்றிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ஐகியா நிறுவனத்தின் கடைகள் விரைவில்  இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்பட இருப்ப தாகவும், இதன் காரணமாக சுமார் 15 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும்  ஐகியா  நிறுவன அதிகாரி தெரிவித்து உள்ளார்.

ஐகியா கடையை  தெலங்கானா மாநில  தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராமராவ் திறந்து வைத்தார்.

கார்ட்டூன் கேலரி