ஐகியா நிறுவனம் ஐதராபாத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்திலும் கால் பதிக்கிறது

கொல்கத்தா

ஐதராபாத்தை தொடர்ந்து மேற்கு வங்கத்தில் உலகப் புகழ்பெற்ற சுவீடன் நிறுவனமான ஐகியா தனது கிளையை திறக்க உள்ளது.

சுவீடன் நிறுவனமான இகியா நிறுவனம் உலகப் புகழ் வாய்ந்ததாகும். இந் நிறுவனம் பல உலக நாடுகளின் முதலீடு செய்து தங்கள் கிளைகளை தொடங்கி வருகிறது. புகழ்பெற்ற ஃபர்னிச்சர் நிறுவனமான ஐகியா நிறுவனம் பல நாடுகளில் இருந்தும் மரப்பொருட்களை தனித்தனியாக உருவாக்கி அவைகளை ஏற்றுமதி செய்து தனது நாட்டில் அதை பொருத்தி உலகெங்கும் விற்பனை செய்து வருகிறது.

கடந்த 2018 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் தனது கிளையை ஐதராபாத் நகரில் ஐகியா தொடங்கியது. தனது வர்த்தக விரிவாக்கத்துக்காக  இந்தியாவில் மற்றொரு கிளையை தொடங்க முடிவு செய்தது.

இது குறித்து மேற்கு வங்க அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியது. பேச்சு வார்த்தை முடிவில் ஐகியா நிறுவனம் சுமார் 38 பில்லியன் யூரோ அதாவது ரூ.3 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் செய்ய உள்ளது.  இந்த தகவலை மேற்கு வங்க நிதி மற்றும் தொழில் துறை அமைச்சர் அமித் மித்ரா அறிவித்தார்.

அப்போது அமித் மித்ரா, “நிறுவனத்தின் உயர்நிலை அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையில் அவர்கள் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டுள்ளனர். இந்த தகவலை மேற்கு வங்க வெளிநாட்டு முதலீட்டாளர்  மாநாட்டில் ஐகியா நிறுவன மேலாளர் டேவிட் மெக்காஸ்லந்து உறுதி செய்தார்.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Ikea, second unit in india, starting at west bengal, Swedish firm, இந்தியாவின் இரண்டாம் கிளை, சுவீடன் நிறுவனம் ஐகியா, மேற்கு வங்கத்தில் துவக்கம், ரூ. 3 லட்சம் கோடி
-=-