பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பயன்படுத்தி வந்த அறையை காணவில்லை.: வழக்கறிஞர் சரவணன் குற்றசாட்டு

 

நீதிமன்றம் அனுமதி அளித்த நிலையில், இளையராஜா ஸ்டூடியோவுக்கு செல்லாமல் புறக்கணித்துள்ள சம்பவம் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

40ஆண்டுகளாக இசையமைத்து வந்த பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள அலுவலகத்திற்கு இன்று இசையமைப்பாளர் நீதிமன்ற அனுமதியுடன் செல்ல இருந்த நிலையில், அவர் அங்கு செல்வதை தவித்துள்ளார்.

முன்னதாக, பிரசாத் ஸ்டூடியோவில் உள்ள இளையராஜா அலுவலகம் சென்ற வழக்கறிஞர், அங்கு இசைஞானி இளையராஜாவுக்கு கிடைத்த பத்ம விபூஷன் உள்பட உயரிய விருதுகள், அவார்டுகள், ரமண மகிரிஷி உள்பட அரிய தலைவர்களுடன் அவர் இடம்பெற்றிருந்த புகைப்படங்கள், இசைக்கருவிகள் போன்றவை கடுமையாக சேதப்படுத்தப்பட்டு குடோனில் போடப்பட்டிருப்தைப்போல இருந்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வழக்கறிஞர் இதுகுறித்து இளையராஜாவுக்கு தகவல் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதைக்கேட்டதும் கடும் மன உளைச்சலுக்கு ஆளான, இளையராஜா, பிரசாத் ஸ்டூடியோ செல்வதை தவிர்த்து விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பிரசாத் ஸ்டூடியோவில் இளையராஜா பாயன்படுத்தி வந்த அறையை காணவில்லை என்று வழக்கறிஞர் சரவணன் கூறியுள்ளார். பத்மபூஷன் விருது, புகைப்படம் என முக்கிய விருதுகள் அந்த அறையில் வைக்கப்பட்டிருந்தன. இளையராஜா பாயன்படுத்தி வந்த பொருட்கள் வேறு அறையில் குப்பைபோல் வைக்கப்பட்டிருந்தன என்று வழக்கறிஞர் சரவணன் குற்றம் சாட்டியுள்ளார்.